சினிமா

சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் அணைத்து சீரியல்களின் நடிகை நடிகர்களும் ஒரே சீரியலில்.! என்ன காரணம்.?

Summary:

சன்டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் நடிகை, நடிகர்கள் அபியும் நானும் சீரியலில் வந்து மீனாவுக்கு வாழ்த்து கோரியுள்ளனர்.

சன் டிவி தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் அபியும் நானும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வித்தியா வினு மோகன். இந்த சீரியலில் குழந்தை கதாபாத்திரங்களான அபி, முகில், சுமோ உள்ளிட்ட குழந்தை நட்சத்திரங்களின் நடிப்பால் இந்த சீரியலுக்கு ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

சமீபத்தில் இந்த தொடரில் பிகில் என்ற கதாபாத்திரத்தில் வந்த ரோபோ சிறுவனின் நடிப்பு சிறுவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் இன்றைய எபிசோட்டில் முகிலின் அம்மா மீனாவுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அப்போது, மீனாவிற்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக மீனாவை அம்மாவாக நினைக்கும் அபி, சன்டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் நடிகை நடிகர்களை மீனாவுக்கு வாழ்த்து கூற வைத்து அந்த வீடியோவை மீனாவிடம் டிவி மூலமாக காண்பித்துள்ளார். அந்த வீடியோவில் பிரபல சீரியல் நடிகர், நடிகைகளும் மீனாவிற்கு வாழ்த்து கூறியுள்ளனர்.


Advertisement