வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தற்போதைய காலகட்டத்தில் சீரியல்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் வழக்கமாக உள்ளது. அதிலும் குறிப்பாக ரசிகர்களுக்கு ஒரு சீரியல் பிடித்து விட்டால் தினமும் எந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் என அதற்காக காத்திருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர் என கூறலாம். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலுக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த சீரியல் கடந்த 2020 ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீரியலில் ஹீரோவாக விராட்டும், ஹீரோயினாக டெல்னா டேவிஸ்ஸூம் நடிக்கின்றனர். வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் குறித்த அதிர்ச்சிதரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த வகையில் அன்பே வா சீரியல் விரைவில் முடிவடையும் உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் அன்பே வா சீரியல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.