சினிமா

வாவ்..!! பாவாடை தாவணியில் பார்க்க பளபளன்னு இருக்கும் அன்பே வா பூமிகா!! வைரலாகும் புகைப்படங்கள்..

Summary:

சன் டிவி சீரியல் நடிகை பூமிகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருக

சன் டிவி சீரியல் நடிகை பூமிகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். ஒருகாலத்தில் இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்து வந்த காலம் மாறி, தற்போது அனைத்து தரப்பினரும் சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர். புது புது சீரியல், புது புது நடிகைகளை களமிறக்கி ரசிகர்களை கவர்ந்துவருகிறது சன் டிவி.

அதுபோன்ற சீரியலில் ஒன்றுதான் "அன்பே வா" இந்த சீரியலின் நாயகியாக பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருபவர்தான் "டெல்னா டெவிஸ்". கதைப்படி இவர் ஒரு அழுமூஞ்சி கதாபாத்திரம் என்றாலும், ரசிகர்கள் மத்தியில் இவருக்கும் சற்று வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.

சீரியலில் நடிப்பது மட்டுமில்லாமல்,  சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார் டெல்னா டெவிஸ். அதேநேரம் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர பிஸியாக இருக்கும் அம்மணி, சமீபத்தில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement