மேடையில் அத்துமீறிய கல்லூரி மாணவர்.! ஷாக்காகி நடிகை அபர்ணா பாலமுரளி கொடுத்த பதிலடி!! வைரல் வீடியோ!!

மேடையில் அத்துமீறிய கல்லூரி மாணவர்.! ஷாக்காகி நடிகை அபர்ணா பாலமுரளி கொடுத்த பதிலடி!! வைரல் வீடியோ!!


student-misbehaviour-with-actress-aparna-balamurali

தமிழ் சினிமாவில் எட்டு தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி. அதனைத் தொடர்ந்து அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான சூரரைப் போற்று திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து பெருமளவில் பிரபலமானார். 

சூரரைப் போற்று திரைப்படத்திற்காக அவர் தேசிய விருதும் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து அவர் ஆர்.ஜே பாலாஜியுடன் வீட்டில் விசேஷங்க, அசோக் செல்வன் உடன் நித்தம் ஒரு வானம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அவர் தற்போது தங்கம் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். அதில் வினீத் ஸ்ரீனிவாசன், பிஜு மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் தங்கம் பட ப்ரமோஷனுக்காக கேரளாவில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றிற்கு படக்குழுவினர் சென்றுள்ளனர். அப்பொழுது விழாமேடையில் நடிகை அபர்ணாவிடம் கல்லூரி மாணவர் ஒருவர் பூ கொடுத்துள்ளார். பின் அந்த மாணவர் சட்டென நடிகை அபர்ணா தோள்மீது கை போட முயன்றுள்ளார். இதனை சற்றும் விரும்பாத அபர்ணா  நழுவி சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அவர் கை கொடுக்க வந்தபோது நடிகை அபர்ணா மறுத்துவிட்டு இருக்கையில் அமர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.