வேற லெவல் கெட்டப்பில் மிரளவைக்கும் லுக்.! அனல் பறக்கும் STR48 போஸ்டர்!!

வேற லெவல் கெட்டப்பில் மிரளவைக்கும் லுக்.! அனல் பறக்கும் STR48 போஸ்டர்!!



STR48 movie poster released

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு பத்து தல திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் தேசிங்கு பெரிய சாமியின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். STR48 என அழைக்கப்படும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் ஃப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரலாற்று படமாக உருவாகும் இந்த திரைப்படம் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்திற்காக நடிகர் சிம்பு பல தற்காப்பு கலைகளை கற்றுள்ளாராம். இந்த நிலையில் சிம்புவின் பிறந்தநாளையொட்டி STR48 படத்தின் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

str

அதில் இரு கதாபாத்திரத்தில் சிம்பு நேருக்கு நேர் ஆக்ரோஷமாக மோதுவது போலவும், பின்னணியில் அனல்பறக்க போர் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் சிம்பு நீண்ட முடி, தாடி என மிரட்டலாக உள்ளார