சினிமா

STR-ன் செம குத்து! இணையத்தை தெறிக்கவிடும் சிம்புவின் 'பெரியார் குத்து' வீடியோ

Summary:

Str in periyar kuthu video song

பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகளில், ரமேஷ் தமிழ்மணி இசையமைப்பில் ‘பெரியார் குத்து’ என்ற ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார் சிம்பு. தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு ஆகியோர் தயாரித்துள்ள இந்த ஆல்பத்தை ரெபெல் ஆடியோ நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. 

'செக்க சிவந்த வானம்' படத்திற்குப் பிறகு ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி, நடனம், பாடல்களிலும் சிம்புவுக்கு விருப்பம் அதிகம் என்பதால் அடிக்கடி ஆல்பங்களை வெளியிடுவதை சிம்பு வழக்கமாக வைத்துள்ளார். 

திராவிட குடும்பத்தின் வாரிசான சிம்பு பெரியாரின் புகழ் பாடும் 'பெரியார் குத்து' பாடலை மிகவும் ஆக்ரோசத்துடன் பாடியது மட்டுமில்லாமல் நடனமும் ஆடியிருக்கிறார். இணையத்தில் வெளியாகியுள்ள இந்த பாடல் சிம்பு ரசிகர்களை மட்டுமின்றி பெரியாரை பின்பற்றுபவர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. 


Advertisement