
ஏதென்ஸ் விமான நிலையத்தில் நிஜமான புன்னகைகள் என்ற தலைப்பில் நடிகை தீபிகா படுகோனே சிலை வைக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் தமிழில் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
அடுத்ததாக அவர் மகாநடி படத்தைத் தயாரித்த அஸ்வின் தத் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப்படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் சித்தார்த் ஆனந்த் இயக்கும் ஷாருக்கான் பதான் என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏதென்ஸ் விமான நிலையத்தில் தீபிகா படுகோனேவுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பிரச்சினைகளுக்கு பிறகு தற்போது ஏதென்சில் வெளிநாட்டு பயணிகள் வருவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் பயணிகளை வரவேற்கும் வகையில் ஏதென்சஸ் சர்வதேச விமான நிலையத்தில் உலக மக்களின் நிஜமான புன்னகைகள் என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் உலக நாடுகளில் உள்ள பல பிரபலங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியா சார்பில்கருப்பு நிற மார்பிள் கல்லினால் செய்யப்பட்ட தீபிகா படுகோனே சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Advertisement
Advertisement