வானத்தில் பறக்கும் ரயில்!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோவால் பெரும் பீதியில் மக்கள்!!

வானத்தில் பறக்கும் ரயில்!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோவால் பெரும் பீதியில் மக்கள்!!


STARLINK TRAIN BY SPACE JET IN AMERICA

அமெரிக்காவில் டெக்சாஸ் மற்றும் மிசிசிப்பி உள்ளிட்ட சில இடங்களில் சமீபகாலமாக இரவு நேரங்களில் வானத்தில் தொடர்ச்சியாக ஒளிகோடுகள் தெரிந்துள்ளது. அவை பார்ப்பதற்கு ரயிலில் விளக்கு எரிவது போன்று காட்சியளித்துள்ளது.

அதை பறக்கும் ரயில் என மக்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், அவை வேற்றுக்கிரகவாசிகள் என்ற வதந்தியும் பரவியது. அதனால்  மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். இந்த  நிலையில் மக்களின் பயத்தை குறைக்கும் வகையில் அமெரிக்காவின் ஸ்பேஸ்ஜெட்  நிறுவனம் இந்த பறக்கும் ரயில் குறித்த தகவலை வெளியிட்டு மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

train

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க்  என்று பெயரிடப்பட்ட அதிவிரைவு இணைய சேவையை  உலகமெங்கும் நிறுவ புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதன்படி ஏறக்குறைய 12000  செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது இந்நிலையில் இதன் முதல் கட்டமாக சமீபத்தில் 60 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 

அவை அனைத்தும் ஒரே நேர்கோட்டில் சென்று பார்ப்பதற்கு ரயில்கள் போல தெரிந்துள்ளது. இதுகுறித்த தகவல் வெளிவந்த பிறகு மக்கள் ஓரளவு பீதியின்றி நிம்மதியாக உள்ளர். மேலும் இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.