சினிமா

நிகழ்ச்சியில் கதறி அழுத விஜய்டிவி பிரபலங்கள்! என்ன நடந்தது? வைரலாகும் வீடியோ!!

Summary:

விஜய் தொலைக்காட்சி என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி ஆர்வம் இருக்கும். அதில் திறமைகளை ஊக்குவ

விஜய் தொலைக்காட்சி என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி ஆர்வம் இருக்கும். அதில் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், மக்களை பெருமளவில் ரசித்து  பொழுதுபோக்கும் வகையிலும் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அவற்றில் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

இந்த நிலையில் தற்போது சூப்பர் கிட்ஸ் என்ற புதிய நிகழ்ச்சி தொடங்க உள்ளது. அதில் அறந்தாங்கி நிஷா, ஈரோடு மகேஷ், ராஜலட்சுமி, தீபா, ராமர் உள்ளிட்ட பல விஜய் டிவி பிரபலங்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டுள்ளனர். இதன் ப்ரமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பிரபலங்கள் பலரும் தாங்கள் ஷூட்டிங் செல்வதால், தங்களது பிள்ளைகளை எவ்வளவு மிஸ் செய்கிறார்கள் என்பதை கண்ணீருடன் கூறியுள்ளனர். அதில் நிஷா தன் மகள் தன்னிடம் வருவதே இல்லை எனவும், சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி தாங்கள் வெளியே கிளம்பும்போது தங்களது குழந்தைகள் அழுவது குறித்தும் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். மேலும் ஈரோடு மகேசும் தன் பிள்ளைகளை மிஸ் செய்வதாக கண்கலங்கியுள்ளார்.

    


Advertisement