என்னது இந்த சீரியல் நடிகை SSLC தேர்வில் மாபெரும் சாதனையா...? வாழ்த்தியே நூல்விடும் ரசிகர்கள்..!

என்னது இந்த சீரியல் நடிகை SSLC தேர்வில் மாபெரும் சாதனையா...? வாழ்த்தியே நூல்விடும் ரசிகர்கள்..!


sslc-achieved-in-the-exam

எஸ்எஸ்எல்சி தேர்வில் பெங்களூருவை சேர்ந்த கன்னட நடிகை சாதனை படைத்துள்ளார்.

பெங்களூரை சேர்ந்த மகதி வைஷ்ணவி பட் கன்னட சின்னத்திரை நடிகையாக இருந்து வருகிறார். இவர் கன்னட சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலம் அடைந்தவர். சீரியலில் நடித்துக் கொண்டே எஸ்எஸ்எல்சி படித்து வந்தார். 

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். மேலும் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதினார். இந்த நிலையில் சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் நடிகை மகதி வைஷ்ணவி பட் 99.04  சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். 

நடிப்பதில் மட்டுமல்லாமல் படிப்பிலும் கவனம் செலுத்தி அவர் சாதனை படைத்துள்ளார். இதை அறிந்த அவரது ரசிகர்கள் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.