சினிமா

அவரை நான் வீட்டில் சந்தித்தேன், ராகவா லாரன்ஸ் குறித்து ஸ்ரீரெட்டி வெளியிட்ட உண்மையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Summary:

sriretti said about the movie change with ragava lawrence

தெலுங்கு திரையுலகில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்றும், பட வாய்ப்பு தருவதாக கூறி திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. மேலும் இதற்காக அவர் அரைநிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார்.

பின்னர் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் இயக்குநர் முருகதாஸ், லாரன்ஸ், சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

இதற்கு  ராகவா லாரன்ஸ் ஸ்ரீரெட்டி தன் மீது கூறும் குற்றச்சாட்டுகள் பொய் எனவும்,  நான் சொல்லும் காட்சிகளுக்கு நடித்துக்காட்டி அவரது நடிப்புத்திறனை என்னிடம் நிரூபித்தால் தனது அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பு தருகிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

  ragava lawrence க்கான பட முடிவு

இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளதாக ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் அவர், “என் நண்பர்களுக்கு நல்ல செய்தியை அளிக்கிறேன். லாரன்ஸை அவரது வீட்டில் சந்தித்தேன். என்னை நன்கு உபசரித்தார். அங்கு நிறைய குழந்தைகள் இருந்தார்கள். அவர்கள் எனக்காக பிரார்த்தனை செய்தார்கள். ஆடிஷனில் கலந்து கொண்டேன். அவருடைய அடுத்த படத்தில் என்னை சேர்த்துக் கொண்டார். நல்ல கதாபாத்திரம் அளிப்பதாக உறுதியளித்தார். அதற்கான அட்வான்ஸ் தொகையையும் பெற்றுக் கொண்டேன். புயலால் பாதிக்கப்பட்ட ஸ்ரீகாகுளம் மக்களுக்கு அந்தத் தொகையை அளிக்க இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


 


Advertisement