சினிமா

குழந்தை பிறந்த சில நாட்களிலேயே விஜய் டிவி பிரபலம் எடுத்த அதிரடி முடிவு! குவியும் லைக்குகள்.

Summary:

Sriranjani

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பிரபலமானவர் தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி. மேலும் இவர் சில காலம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.

மேலும் இவர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலின் கதாநாயகனான அமித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் தான் அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தற்போது ஸ்ரீரஞ்சனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது உடல் எடையை குறைக்க திவீர யோகா பயிற்சிகளை செய்து வரும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது அப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கமெண்ட் மற்றும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Advertisement