பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
அவரு உல்லாசமா இருக்க, ஒவ்வொரு ராத்திரிக்கும், ஒவ்வொரு பொண்ணுங்க வேணுமாம், இயக்குனரின் அந்தரங்கத்தை ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய ஸ்ரீரெட்டி.!
தெலுங்கு திரை உலகில் படவாய்ப்பு தருவதாக கூறி தன்னை படுக்கைக்கு மட்டும் பயன்படுத்தி ஏமாற்றியதாக தெலுங்கு திரையில் சில நடிகர்கள் , இயக்குனர்கள், மற்றும் தயாரிப்பாளர்கள் மீது அதிரடி புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீ ரெட்டி .
இதனால் தெலுங்கு திரையுலகமே பெரும் பீதியில் இருந்தது.
இந்நிலையில் ஸ்ரீ ரெட்டியின் பாலியல் புகார் தமிழ் சினிமாவின் மீது திரும்பி சில இயக்குநர்கள் முருகதாஸ், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஆதி ஆகியோர் மீதும் பாலியல் புகார் அளித்தார்.
இந்நிலையில் அவர் தற்போது தனது வாழ்க்கை வரலாற்றை கூறும் படமான 'ரெட்டி டைரி' என்ற படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது .
இந்நிலையில் சமீபகாலமாக தனது பாலியல் புகார்களை நிறுத்தி வைத்திருந்த ஸ்ரீ ரெட்டி தற்போது அதிரடியாக தெலுங்கு இயக்குனர் ராம்கி மீறி மீது புகார் ஒன்றை வைத்துள்ளார்.
அதாவது ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இயக்குனர் ராம்கியின் வாட்ஸ் அப் உரையாடலை வெளியிட்டு , இதனை எனக்கு எஸ்.எம் என்பவர் அனுப்பி வைத்தார் .
அதில் ராம்கி தனது பாலியல் தேவைக்கு இளம்பெண்களை கேட்டிருக்கிறார் .அவரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.