தமிழ் திரைக்கு வரவிருக்கும் ஸ்ரீதேவி மகள்...!
தமிழ் சினிமாவின் பிரபல மற்றும் முன்னணி நடிகையான ஸ்ரீதேவி மகள் தமிழ் திரைக்கு வருவதாக தகவல் வந்துள்ளது.
மறைந்த முன்னாள் பிரபல நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர். இவர் ஏற்கனவே "தடக்" என்ற ஹிந்தி படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. அந்த படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பையும் பெற்றது. அதுமட்டுமல்லாமல் ஜான்வி கபூரின் நடிப்பும் மற்றவர்கள் பாராட்டும் அளவிற்கு இருப்பதாக அனைவரும் கூறி பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜான்வி தமிழ் மற்றும் தெலுங்கி சினிமாவில் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஜான்வியிடம் பேசி வருகிறார்கள். தமிழ்ப் படத்தில் நடிக்கவும் ஜான்விக்கு வாய்ப்பு வந்துள்ளது என்றும் கூறுகின்றனர்.
இரண்டு இயக்குனர்கள் அவரிடம் அணுகி கதை சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜான்வி தரப்பில் கூறும்போது ‘‘தமிழ், தெலுங்கு இயக்குனர்கள் ஜான்விக்கு கதை சொல்லி உள்ளனர். தென்னிந்திய மொழிகளில் நடிக்கவும் ஜான்விக்கு விருப்பம் உள்ளது. விரைவில் இது பற்றிய முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கலாம் என்று சொல்கிறார்கள்...