எஸ்.பி.பி. உடல் நிலையில் முன்னேற்றம்! ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் தொடர் பிரார்த்தனை!spb-health-condition-ZXY5G9

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து  சிகிச்சை பெற்று வருகிறார்.  

இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி அவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் அவர்  செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கை வெளியானது. இந்நிலையில் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென பிரார்த்தனைகள் மேற்கொண்டு உருக்கமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

SPB

கடந்த சில நாட்களாக எஸ்பிபியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்துவந்த நிலையில், சற்று முன்னேற்றம் அடைந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எஸ்.பி.பி., மகன் சரண் கூறுகையில், எனது தந்தை முழுவதும் குணமடையவில்லை என்றாலும் உடல் உறுப்புகள் சீராக இயங்கிவருகின்றன. மருத்துவ குழுவினரும் தன்னம்பிக்கையுடன் சிகிச்சை அளித்துவருகின்றனர். அனைவரது பிரார்த்தனைக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.