இவருக்கு இணை இவரேதான்! கண்கலங்கிய இளம் பாடகியை சிரிக்கவைத்து மகிழ்ந்த எஸ்.பி.பி! வைரலாகும் அரிய வீடியோ!

இவருக்கு இணை இவரேதான்! கண்கலங்கிய இளம் பாடகியை சிரிக்கவைத்து மகிழ்ந்த எஸ்.பி.பி! வைரலாகும் அரிய வீடியோ!



Spb first time sing with super singer priyanga

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனோ தொற்றால் கடந்த மாதம் 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் எஸ்.பி.பியின் உடல் அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க, சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பலரும் எஸ்.பி.பியின் அரிய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நெகிழ்ச்சி சம்பவங்களை பகிர்ந்து அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். 

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகி பிரியங்கா, முதன்முதலாக எஸ்பிபியுடன் இணைந்து பாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்பொழுது நிகழ்ச்சியில் அவர் மகிழ்ச்சியில் கண்கலங்கும் போது எஸ்பிபி அவர்கள் நகைச்சுவையாக பேசி அவரை சிரிக்க வைப்பார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் இவருக்கு இணை இவரே தான் என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.