கடவுள் கொடுத்த பெஸ்ட் கிஃப்ட்! செம ஹேப்பியில் சௌந்தர்யா! ரஜினியின் கியூட் ரியாக்ஷனை பார்த்தீங்களா!!

கடவுள் கொடுத்த பெஸ்ட் கிஃப்ட்! செம ஹேப்பியில் சௌந்தர்யா! ரஜினியின் கியூட் ரியாக்ஷனை பார்த்தீங்களா!!


sowndarya-with-son-and-father-photo-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருகிறார். சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

அதனைத் தொடர்ந்து படங்களில் தனது கவனத்தை செலுத்தி வந்த சௌந்தர்யா கடந்த ஆண்டு தொழிலதிபர் வணங்காமுடி மகன்  விசாகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அண்மையில் சௌந்தர்யா மற்றும் விசாகன் தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு ‘வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி’ என்று பெயர் வைத்துள்ளனர்.

தன் பிறந்தநாளில் தனது மகன் மற்றும் அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சௌந்தர்யா, எனது பிறந்தநாளில் எனக்கு வாழ்த்து தெரிவிக்க நேரம் ஒதுக்கிய அனைவருக்கும் நன்றி. கடவுள் இந்த ஆண்டு என்னுடைய வீர் பாப்பாவை எனக்கு சிறந்த பரிசாக அளித்து வாழ்த்தியுள்ளார். இந்த கடவுளின் குழந்தை அதாவது ஜினிகாந்த்தை குறிப்பிட்டு எப்பொழுதும் என் பின்னால் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.