மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
தன் தந்தை ரஜினிகாந்தின் நலனுக்காக அவரது மகள் செய்த காரியம்! பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் எக்கசக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக, சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
இளைய மகள் சௌந்தர்யா கடந்த 2010ஆம் ஆண்டு தொழிலதிபர் அஸ்வினை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சௌந்தர்யா மற்றும் அஸ்வினுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து சௌந்தர்யா தனது மகன் வேத்துடன் தந்தை ரஜினிகாந்த் வீட்டில் வசித்து வந்த சௌந்தர்யா கடந்த 2019-ம் ஆண்டு தொழிலதிபர் விசாகனை திருமணம் செய்துகொண்டார்.
இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாமல் அவ்வபோது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் கூட அண்ணாத்த சூட்டிங் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வந்தார். இந்த நிலையில் நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யா தனது தந்தையின் உடல் நலனுக்காக கணவர் மற்றும் மகனுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது ரசிகர்களும் அவருக்காக பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.