ஒரு வாரத்தில் தனது இரண்டாவது திருமணம் இருக்க, ரஜினியின் மகள் வெளியிட்ட புகைப்படம்.!

sowndarya rajinikanth post image like bride


sowndarya rajinikanth post image like bride

தமிழ் சினிமாவில் பல வெற்றிபடங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக புகழ்பெற்றவர் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த, இவருக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர்.

இதில் இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவர் கோச்சடையான், விஐபி2 போன்ற படங்களை இயக்கியுள்ளார்
மேலும் இவர் 2010ல் தொழிலதிபர் அஷ்வினை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்.இந்நிலையில்  இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சௌந்தர்யா கடந்தவருடம் அஷ்வினை விவாகரத்து செய்து மகன் வேத் உடன் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். 

  sowndarya

இந்நிலையில் தற்போது சௌந்தர்யா திமுகவின் முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின் தம்பி தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனை இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். இவர்களது திருமணம் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பட்டு புடவை மற்றும் அழகழகான ஆபரணங்களை அணிந்து மணமகள் போன்று இருக்கும் புகைப்படம் ஒன்றை செளந்தர்யா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மேலும் அதில்  ஒரு வாரத்தில் திருமணம்! இதில் மணமகள் தருணம் எனவும் பதிவிட்டுள்ளார்.