சினிமா

திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக சௌந்தர்யா வெளியிட்ட வீடியோ! யாரை பற்றி தெரியுமா?

Summary:

sowndarya post ved playing video

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவிற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகனுக்கும் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம் 10ம் தேதி இரண்டாவதாக திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு, திருமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய படம்

சௌந்தர்யாவிற்கு ஏற்கனவே தனது முதல் திருமணத்தின் மூலம் வேத் கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறான்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சௌந்தர்யா தனது கணவருடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது, வேத் விளையாட்டு ட்ரில்லர் மெஷின் ஒன்றை வைத்து காரில் விளையாடுவது போன்ற வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில் எங்களது சொந்த சிறிய மெக்கானிக் வேத் காரை வடிவமைக்கிறான் என்று குறிப்பிட்டுள்ளார் மேலும் குழந்தைகள் வேகமாக வளர்கின்றன, இறைவனுக்கு நன்றி எனவும் கூறியுள்ளார். 


Advertisement