ரியல் ஹீரோ சோனு சூட்டிற்கு கிடைத்த மாபெரும் கவுரவம்! வேற லெவல்.. கொண்டாடும் ரசிகர்கள்!!

ரியல் ஹீரோ சோனு சூட்டிற்கு கிடைத்த மாபெரும் கவுரவம்! வேற லெவல்.. கொண்டாடும் ரசிகர்கள்!!



sonu-sood-poster-in-spice-jet-flight

தமிழ்சினிமாவில் பல படங்களில் கொடூர வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் சோனு சூட். இவர் தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சோனு சூட் சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் ஹீரோவாவார். 

இவர் கொரோனா காலகட்டத்தில் ஏராளமான உதவிகளை செய்துள்ளார். நடிகர் சோனு கொரோனாவை ஒழிக்க பாடுபட்ட நர்சுகள் மற்றும் மருத்துவர்கள் தங்க தனது 5 நட்சத்திர ஹோட்டலை இலவசமாக வழங்குவது, புலம்பெயர் தொழிலாளிகளை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தது என தொடர்ந்து கணக்கிலடங்காத ஏராளமான உதவிகளை செய்துள்ளார்.

அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக தனது 10 கோடி மதிப்பிலான சொத்தினை அடமானம் வைத்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து மக்கள் சேவை செய்து வந்த இவருக்கு தற்போது பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இவரை கௌரவிக்கும் விதமாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தங்களுடைய 747 விமானத்தில் சோனுசூட்டின் பிரம்மாண்டமான போஸ்டரை ஒட்டி சிறப்பித்துள்ளது.

இதனைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த சோனு சூட் நன்றி கூறியுள்ளார். மேலும் இந்த தருணத்தில் தனது பெற்றோர்களை அதிகம் மிஸ் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.