சினிமா

சோனாலிக்காக பிரியங்கா செய்த செயல்...! நன்றி தெரிவித்த சோனாலி...!

Summary:

sonali-bendre-new-getup

பிப்ரவரி 14 லவர்ஸ் டே. லவர்ஸ் டே என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது காதலர் தினம் படம் தான். அந்த காதலர் தினம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை தான் சோனாலி பிந்த்ரே. இவரை தமிழில் ஒருசில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். கொஞ்சம் காலமாக இவருக்கு ஏற்பட்ட புற்று நோய் காரணமாக அவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் அவர் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

அவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம் என கூறலாம். அவரின் உடல்நிலை விரைவில் குணம் ஆகா வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருவதோடு ஆறுதல் கூறிவருகின்றனர். அடிக்கடி சோனாலி தன் புகைப்படங்களை அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். சிகிட்ச்சையால் அவர் அழகான தலை முடியை இழந்துள்ளார். அவரின் தோற்றத்தால் பலருக்கு அதிர்ச்சி தான்.

இந்நிலையில் பிரபல நடிகையுமான பிரியங்கா சோப்ரா அவர்களும், சோனாலி பிந்த்ரே அவர்களும் நெருங்கிய தோழிகள் ஆவர். சோனாலி பிந்த்ரே-யின் நிலையை பார்த்து வருத்தமடைந்த சோப்ரா, அமெரிக்காவில் உள்ள மிகவும் பிரபல விக் நிறுவனத்தில் ஆர்டர் செய்து விக் ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதோடு உன் தலை முடி இழந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் கூறியுள்ளார். இதற்காக சோனாலிகா அவருக்கு நன்றி தெரிவித்துள்ளாராம்.


Advertisement