Vettaiyan: வேட்டையன் படத்தின் முதல் பாடல் வெளியீடு; மாஸ் காண்பித்த மனசிலாயோ.!
லிப் டு லிப் முத்தகாட்சி.! பிரபல நடிகரை பார்த்து பயந்த சினேகா யார் அந்த நடிகர்.?
என்னவளே திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கால் பதித்த சினேகா, அதற்குப் பிறகு ஜனா, ஆனந்தம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், வசீகரா என்று பல்வேறு முன்னணி கதாநாயகர்களோடு நடிக்க தொடங்கினார். இந்நிலையில் தான் நடிகை சினேகா ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது குறிப்பாக ஒரு விஷயத்தில் பயந்தது தொடர்பான ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
அதாவது கடந்த 2004 ஆம் வருடம் சரண் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். இது ரீமேக் திரைப்படம் தான் என்றாலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்றார் போல நகைச்சுவை காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து முதன்முறையாக நடித்திருந்தார் ஸ்னேகா. இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானபோது நடிகை சினேகா ஒரு கோரிக்கையை வைத்ததாக சொல்லப்படுகிறது. அதாவது, அந்த படத்தில் கமல்ஹாசனோடு உதட்டோடு உதடு முத்த காட்சிகள் இருக்கக் கூடாது என்று அவர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
ஏனெனில் கமல்ஹாசனின் பல்வேறு திரைப்படங்களில் நடிகைகளுடன் உதட்டோடு உதடு முத்த காட்சி வருவதால் பயம் கொண்ட சினேகா, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் இப்படி ஒரு விஷயத்தை முன் வைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் அந்த திரைப்படம் வெளியான அந்த சமயத்திலேயே வெளியானதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.