தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடி சினேகா.. உறுதிப்படுத்திய இயக்குனர் வெங்கட் பிரபு.!

தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடி சினேகா.. உறுதிப்படுத்திய இயக்குனர் வெங்கட் பிரபு.!



sneha-pair-with-vijay-in-thalapathi-68-movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

vijay

தற்போது இந்த படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் அக்டோபர் மாதம் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

அதன்படி, இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில் தற்போது விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிப்பதை உறுதி செய்யும் வகையில், இயக்குனர் வெங்கட் பிரபு சினேகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

vijay

 இதன் மூலம் தளபதி 68 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிப்பது உறுதியாகியுள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.