சினிமா

வாவ்.. இளம் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பார் போல.. செம ஸ்லிம்மாகி 39 வயதிலும் சினேகா எப்படியிருக்காரு பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் கமல், அஜித், விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராள

தமிழ் சினிமாவில் கமல், அஜித், விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. புன்னகை இளவரசி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட அவர் 
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்.

இந்த நிலையில் அவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் இடையில் சினிமாவில் இருந்து சில காலங்கள் விலகியிருந்த அவர் தற்போது மீண்டும் 
பல படங்களில் முன்னணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சற்று உடல் எடை அதிகரித்திருந்த சினேகா தற்போது மீண்டும் தீவிர பயிற்சிக்குப் பிறகு உடல் எடை குறைந்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் 39 வயதிலும் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் செம்ம அழகாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement