சினிமா

செம சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்! கியூட் புகைப்படத்துடன் மிக உருக்கமாக நன்றி கூறிய நடிகை சினேகா! அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?

Summary:

தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு நடிகை சினேகா கணவருக்கு நன்றி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் என்னவளே  என்ற திரைப்படத்தில் நடித்ததன்  மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சினேகா. அதனை தொடர்ந்து அவர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம்,  விரும்புகிறேன், வசீகரா என தொடர்ந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் ரசிகர்களால் புன்னகை இளவரசி என அழைக்கப்பட்ட நடிகை சினேகா 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு விகான் என்ற 5 வயது ஆண் குழந்தை இருந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆத்யந்தா என்ற பெண் குழந்தை  பிறந்தது.

நடிகை சினேகாவுக்கு நேற்று பிறந்தநாள். அதனை முன்னிட்டு அவரது கணவர் பிரசன்னா வீட்டை செமையாக அலங்காரம் செய்து, கேக் வெட்டி மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சினேகா  மிக உருக்கமாக தனது கணவருக்கு நன்றி கூறியுள்ளார்.மேலும் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

View this post on Instagram

More pics🥰🎂🎂🎂😍😍

A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on


Advertisement