சினிமா

நடிப்பு திறமைக்கு கிடைத்த வெற்றி; பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா

Summary:

எஸ்.ஜே சூர்யா இயக்குனராக பல சிறந்த படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் தனது திறமையை பல படங்களில் நிரூபித்துள்ளார். 

அவர் இயக்குனராக சாதித்ததை விட ஒரு நடிகனாக வளர்ந்து வருகிறார். தற்போது அது பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்குமளவிற்கு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

தொடர்புடைய படம்

தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் அமிதாபச்சன் நடிக்கும் 'உயர்ந்த மனிதன்' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் முதன் முறையாக பாலிவுட்டில் தடம் பதிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. 

இப்படத்தை கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்குகிறார். இப்படத்திற்க்கு அமிதாப் 40 நாட்கள் கால்சீட் கொடுத்துள்ளார். இப்பட தலைப்பை நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு அமிதாப்பிற்க்கு வாழ்த்தும் தெரிவித்தார்.
 


Advertisement