அடடே.. 54 வயதாகும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு திருமணமா?.. தீவிரமாக மணப்பெண் தேடும் குடும்பத்தினர்..!!

அடடே.. 54 வயதாகும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு திருமணமா?.. தீவிரமாக மணப்பெண் தேடும் குடும்பத்தினர்..!!


SJ Surya Marriage

தமிழ் சினிமாவின் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் என்ற பன்முகதிறமையை கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் வாலி, குஷி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். 

அதன் பின் அன்பே ஆருயிரே, நியூ போன்ற படங்களின் மூலம் சிறந்த நடிகராகவும் வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து விலகியிருந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா, அதன் பின் "இசை" படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். 

பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கிய நிலையில், ஹீரோவாக மட்டுமல்லாமல் மெர்சல், ஸ்பைடர், மாநாடு போன்ற படங்களில் வில்லனாகவும் மிரட்டி வருகிறார்.

sj surya

இவருக்கு 54 வயதாகுவதை தொடர்ந்து இதுவரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இதனால் விரைவில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் எஸ்.ஜே.சூர்யாவின் குடும்பத்தினர் தீவிரமாக மணப்பெண் தேடிவருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையா?, இல்லையா? என்று தெரியவில்லை. ஏனெனில் இதுவரை எஸ்.ஜே.சூர்யாவின் தரப்பிலிருந்து இது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.