சினிமா

கல்லூரி தோழிகளுடன் செம கலக்கலாக ஷிவாங்கி! எவ்ளோ ஜாலியா இருக்காரு பார்த்தீர்களா!! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தி

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவாங்கி. இவரது இவர்கள் அனைவரையும் பெருமளவில் கவரும். இந்த நிலையில் வெகுளிதனமாக பேசும்,  அங்குமிங்கும் ஓடி குழந்தைத்தனமாக சேட்டைகள் செய்யும் ஷிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டார்.

அதன் முதல் சீசனை விட 2வது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் ஷிவாங்கி கோமாளியான மற்றும் போட்டியாளரான அஸ்வினுடன் சேர்ந்து செய்த அட்ராசிட்டிகள் வேற லெவல். மேலும் தற்போது ஷிவாங்கிக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் டான் படத்திலும், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்டிகல் 15 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஷிவாங்கி தனது கல்லூரி தோழிகளுடன் எடுத்த கலக்கலான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement