கமலுடன் பெண் வேடத்தில் இருக்கும் நடிகர் யாரென்று தெரிகிறதா.?! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.!

கமலுடன் பெண் வேடத்தில் இருக்கும் நடிகர் யாரென்று தெரிகிறதா.?! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.!



Sivakumar wintage lady getup photo viral

கோலிவுட்டில் பல நடிகர்கள் கிசுகிசுக்களில் சிக்கினாலும் கூட நடிகர் சிவகுமார் மட்டும் எந்த சிக்கல் எனும் சிக்காமல் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருக்கக்கூடிய நடிகர். நடிப்பில் இருந்து விலகி தற்போது ஓய்வு எடுத்து வருகிறார் சிவகுமார். 1965-ம் ஆண்டு ஏ.சி.திரிலோகச்சந்தரின் இயக்கத்தில் வெளியாகிய காக்கும் கரங்கள் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சிவகுமார் அதன் பின் நிறைய படங்களில் நடித்துள்ளார். 

ராஜராஜசோழன், திருமால் பெருமை, அன்பிள்ளை சிங்கம் மற்றும் பட்டிக்காட்டு ராஜா என்ற பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த அவர் அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்திருந்தார். 

சிவக்குமார்

சிவகுமாரின் நடிப்பில் வெளியான ஆட்டுக்கார அலமேலு, சிந்து பைரவி, வண்டி சக்கரம் மற்றும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி உள்ளிட்ட படங்கள் அனைத்தும் அவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது.

கடந்த 1991 முதல் முக்கியத்துவம் பெற்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கிய சிவக்குமார், ராம்கி, அர்ஜூன், கார்த்திக், பிரபு மற்றும் விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இதில், 1990-களில் விக்ரம் நடிப்பில் வெளியாகிய சேது திரைப்படத்தில் அவருடைய அண்ணனாக சிவக்குமார் நடித்திருப்பார். 

சிவக்குமார்

அதன் பிறகு சிவக்குமார் சின்னத்திரையில் சித்தி, அண்ணாமலை உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருந்தார். கடந்த 2001-ல் அஜித் நடிப்பில் வெளியாகிய பூவெல்லாம் உன் வாசம் திரைப்படம் தான் சிவக்குமார் நடித்த கடைசி திரைப்படம். இந்த நிலையில் தற்போது சிவகுமாரின் லேடி கெட்டப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் சிவக்குமாரா இது என்று ஆச்சரியப்பட்டு போகின்றனர்.