நடிகர் சூர்யா, கார்த்தியின் தந்தை, நடிகர் சிவகுமார் குறித்து தீயாய் பரவும் தகவல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் சூர்யா, கார்த்தியின் தந்தை, நடிகர் சிவகுமார் குறித்து தீயாய் பரவும் தகவல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!


sivakumar-affected-by-corono-news-viral

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த கொரனோ வைரஸ் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பரவி கோரத்தாண்டவமாடி வந்தது. மேலும் சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அதுமட்டுமின்றி ஏராளமானோர் உயிரிழக்கும் துயரமும் நேர்ந்தது.

இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் கொரோனோ பரவல் குறித்த அச்சம் அனைவரிடமும் உள்ளது. மேலும் மத்திய, மாநில அரசும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

sivakumar

இந்தநிலையில் தற்போது முன்னணி நடிகரும், நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் தந்தையுமான சிவகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் அவர் தியாகராஜ நகரில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து நடிகர் சிவகுமார் தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.