சினிமா

மிரட்டலாக வெளியான சிவகார்த்திகேயன் நடிக்கும் Mr. லோக்கல் படத்தின் டீசர்! வீடியோ.

Summary:

Sivakarthikeyan mr local movie teaser

தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சீமராஜா திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை. இந்நிலையில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இருவரும் 'வேலைக்காரன்' படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் Mr . லோக்கல்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசரில், என் பெயர் மனோகர் என்னை ஏரியாவுல எல்லோரும் செல்லமா மிஸ்டர் லோக்கல்னு கூப்பிடுவாங்க என்று தொடங்கும் படத்தின் டீசரில் நயன்தாராவும் சிவகார்த்திகேயனும் அடிக்கடி மோதிக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ-ஆக நடித்திருக்கும் நயன்தாராவை,டோரா புஜ்ஜிய தூக்கி வச்சு கொஞ்சப்போறேன் என்று மலையாளம் கலந்த தமிழில் சிவகார்த்திகேயன் அழைப்பது டீசரின் செம்ம சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது. 


Advertisement