புகைப்படத்துடன் அடுத்த படம் குறித்து புதிய அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்! புகைப்படம்!

புகைப்படத்துடன் அடுத்த படம் குறித்து புதிய அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்! புகைப்படம்!


sivakarthikeyan-back-to-set-sk-14-movie-update

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் Mr.லோக்கல். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், யோகிபாபு ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் படம் வரும் மே 1 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் Mr.லோக்கல் படத்தின் வேலைகள் முடிந்துள்ள நிலையில் தனது அடுத்த படமான SK14 படத்தில் மீண்டும் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். இதை தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

Mr Local

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே 60 சதவிகிதம் நிறைவு பெற்றிருப்பதாகவும், தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கிவருகிறார்.

SK14 படம் சயின்ஸ் பிக்சனை மையமாக கொண்ட படமாக உருவாகிவருவதால் படத்தில் ஏகப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் முதன் முறையாக புது விதமான கேமிரா பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.