அடேங்கப்பா.. வேற லெவல்! சிவகார்த்திகேனின் டான் படைத்த பெரும் சாதனை! செம ஹேப்பியில் கொண்டாடும் ரசிகர்கள்!

அடேங்கப்பா.. வேற லெவல்! சிவகார்த்திகேனின் டான் படைத்த பெரும் சாதனை! செம ஹேப்பியில் கொண்டாடும் ரசிகர்கள்!


Sivakarthickeyan movie crossed 100 crores collection

நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் கூட்டணியில் இணைந்து உருவான திரைப்படம் டான். சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், சிவாங்கி, மிர்ச்சி விஜய், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டான் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படம் வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல விமர்சனத்தையே பெற்று வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் வெளிவந்த இந்த படம் 12 நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை லைகா ப்ரொடக்ஷன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பெருமையோடு தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.