அந்த 2 விஷயங்கள்... வைரலான சிவகார்த்திகேயனின் அசத்தல் வீடியோ! பாராட்டிய காவல் துணை ஆய்வாளர்!



sivakarthicken-wished-by-police-debuty-commisionar

விஜய் தொலைக்காட்சியில்  நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது  பயணத்தை தொடங்கி,  பின்னர் தனது கடுமையான உழைப்பால் முன்னேறி, ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது திரைப்படங்களுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ ஒன்று சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், என் வாழ்க்கையில் என்னை நினைத்து நான் பெருமைப்படும் விஷயம் என்றால் இந்த இரண்டுதான். இன்றுவரை நான் சிகரெட் பிடித்தது கிடையாது. தண்ணி அடித்தது கிடையாது. அதற்கு காரணம் என்னுடைய நண்பர்கள்தான்.. அவர்கள் எப்போதும் வாடா இங்கே போகலாம்,  அங்கே போகலாம் என்று என்னை அழைத்தது கிடையாது. உங்களையும் உங்கள் உடலையும் அப்பா அம்மா சம்பாதித்த காசு கொடுத்து, நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த அட்வைஸ் கேட்க கசக்கும் ஆனால் நீங்கள் குடிக்கும் குடியும் கசக்கிறது தானே.. அதை விட்டுவிடுங்கள் என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோ வைரலாக பரவ,  இதனை பகிர்ந்து திருநெல்வேலி காவல் துணை ஆணையர் அர்ஜுன் தனது டுவிட்டர் பக்கத்தில், நட்சத்திரங்கள் சொல்வதை அப்படியே கேட்பவர்கள் என்றால் இதனையும் கொஞ்சம் கேளுங்க . குடிக்க , புகைக்க எந்த நண்பனும் அழைக்க மாட்டான், அப்படி அழைப்பவர் நட்பிலிருந்து வெளியேறுங்கள். அவன் உங்களை உலகிலிருந்து வெளியேற அழைக்கிறான் என பதிவிட்டிருந்தார்.

மேலும் இளைய சமுதாயத்தை நல்வழிப் படுத்தும் உங்களின் உணர்வுப்பூர்வமான வழிகாட்டுதல்கள் தொடரட்டும். அன்பும் நன்றியும் எனவும்  சிவகார்த்திகேயனுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.  இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்ததோடு, உங்கள் அன்பும் வாழ்த்தும் ஊக்கப்படுத்துகிறது சார்.. நன்றி அன்பை விதைப்போம் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சிவகார்த்திகேயனின் ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.