சினிமா

பார்வையற்ற பாடகர் திருமூர்த்தியை மேடையேற்றி அழகு பார்த்த டி.இமான்! வைரலாகும் உருக்கமான வீடியோ

Summary:

Singer thirumoorthy on seeru press meet

இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் சீறு. நடிகர் ஜீவா நடித்துள்ள இந்தப்படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது. 

ஆக்சன் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. 

இந்த படத்தில் செவ்வந்தியே என்னும் பாடலை நொச்சிப்பட்டி திருமூர்த்தி என்பவர் பாடியுள்ளார். பார்வையற்ற திருமூர்த்தி சாதரணமாக பாடிய விசுவாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடல் மூலம் இணையத்தில் பிரபலமானார். 

அவரது குரல் மற்றும் திறமையை கண்டு வியந்த டி. இமான் திருமூர்த்திக்கு நிச்சயம் சினிமாவில் பாட வைப்பேன் என்றார். சொன்னது போலவே செய்து காட்டிய இமான் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திருமூர்த்தியை அறிமுகம் செய்தார். அப்போது எல்லோருக்கும் நன்றி தெரிவித்த திருமூர்த்தி செவ்வந்தியே பாடலின் சில வரிகளையும் பாடினார். 


Advertisement