சினிமா

அட.. குக் வித் கோமாளி பைனலுக்கு இந்த பிரபலமும் வந்திருக்காங்களா!! இவங்கதானே இப்போ செம ட்ரெண்டிங்கில் இருக்காங்க!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் மட்டுமின்றி போட்டியாளர்களும், நடுவர்களும் ரகளைகள் செய்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பர். அதிலும் கோமாளிகளாக புகழ், பாலா, ஷிவாங்கி மணிமேகலை, சரத், சக்தி செய்யும் அட்ராசிட்டிகள் வேற லெவல்.

இந்நிலையில் செம ஜாலியாக  சென்று கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளது.  மேலும் இறுதி போட்டிக்கு அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, பவித்ரா, ஷகீலா ஆகியோர் தகுதியாகியுள்ளனர். குக் வித் கோமாளியின் இறுதி நிகழ்ச்சிகள் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதியம் 2 மணி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் இதில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொள்கிறார். இதன் ப்ரோமோ வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

அவர் மட்டுமின்றி குக் வித் கோமாளி பைனலுக்கு என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடி செம ட்ரெண்டிங்கில் இருந்து வரும் பாடகி தீயும் வருகை தந்துள்ளார். இந்நிலையில் போட்டியாளர்கள் சிலர் அவருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement