100வது நாள் கொண்டாட்டம்! ரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி! வைரலாகும் மாஸ் செல்ஃபி!!

100வது நாள் கொண்டாட்டம்! ரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி! வைரலாகும் மாஸ் செல்ஃபி!!


simpu-surprise-to-fans-selfi-viral

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி கடந்த நவம்பர் 25ஆம் தேதி வெளிவந்து 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு. இத்திரைப்படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் வில்லனாக எஸ்.ஜே சூர்யா அசத்தியுள்ளார். அவர்களுடன் மனோஜ், பிரேம்ஜி, கருணாகரன், சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வி ஹவுஸ் ப்ரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்த இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்  பெற்றது. கடின உழைப்பால் உடல் எடையை குறைத்து புதிய  நபராக மாறிய சிம்புவிற்கு இப்படம் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.

Simbhu

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் ரோகினி தியேட்டரில் மாநாடு திரைப்படம் 100 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு நடிகர் சிம்பு சர்ப்ரைஸாக சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அங்கு ரசிகர்களுடன் சேர்ந்து அவர் செல்ஃபியும் எடுத்து கொண்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Simbhu