சினிமா

குஷ்பூவுக்கு சிம்பு மருமகனா? சுந்தர்.சியின் முடிவு என்ன?

Summary:

simpu going to act as son in law to kushpoo

சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண் ,சமந்தா, நதியா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியையும், வரவேற்பையும் பெற்ற படம் "அத்தாரின்டிக்கி தாரேதி"     

இந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைகா புரொடக்சன் நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும் தமிழில் இந்த படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளார் .

மேலும் தமிழ் ரீமேக்கான இந்த படத்தில் பவன் கல்யாண் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும், நதியா கதாபாத்திரத்தில் குஷ்புவும் நடிக்க உள்ளனர், அதாவது குஷ்புவுக்கு மருமகனாக சிம்பு நடிக்க உள்ளார். 

மேலும் படத்தின் நாயகி தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அதுமட்டுமின்றி இந்த படத்தின் கதை பல ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த  "உள்ளத்தை அள்ளித்தா" என்ற படத்தின் கதையை ஒத்து இருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் சிம்புவுக்கு குஷ்பூ மாமியாரா? என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement