சிம்புவின் வெந்து தணிந்தது காடு; 4 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?? கொண்டாடும் ரசிகர்கள்!!Simbu venthu thaninthadu laafu collection in 4 days

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து அசத்தலாக உருவாகியுள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். 

வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அமோக வரவேற்பை பெற்ற்றுள்ளது. மேலும் வசூல் சாதனையும் படைத்து வருகிறது. அதாவது வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி முதல் நாளிலேயே உலகளவில் 10 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படம் வெளியாகி நான்கு நாட்களை கடந்த நிலையில் தற்போது வசூல் விவரம் குறித்த தகவல் பரவி வருகிறது. அதாவது படம் வெளியாகி 4 நாட்களில் உலகளவில் ரூ.50.56 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது  இதனை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

simbu