சினிமா

நடிகர் விவேக்கின் ஆத்மா சாந்தியடைய. இதை செய்யுங்க! அஞ்சலி செலுத்தி சிம்பு செய்யவிருக்கும் காரியம்!!

Summary:

நடிகர் விவேக் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற

நடிகர் விவேக் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார். இது திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் பலரும் வேதனையுடன் கண்கலங்கியவாறே அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் விவேக் மிகுந்த சமூக அக்கறை கொண்டவர். சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் ஈடுபடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் ஏராளமான மரங்களை நட்டுள்ளார். தான் மரம் நடுவது மட்டுமின்றி தனது ரசிகர்களும் மரம் நட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் வந்தார்.

இந்நிலையில் நடிகர் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், விவேக்கிற்கு நாம் செய்யவேண்டியது அவர் செய்து வந்ததை நாம் தொடர்ந்து செய்வதுதான். நான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்று வைக்க இருக்கிறேன். சின்ன கலைவாணரை நேசிக்கும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்று நட்டு அவரது இதயத்திற்கு நெருக்கமான அஞ்சலியை செலுத்துவோம். என்று அன்போடு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் இதய அஞ்சலிகள் விவேக் சார் என தெரிவித்துள்ளார்.

 


Advertisement