பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சென்றாயனுக்கு வரவேற்பு , கலக்கல் பரிசளித்த சிம்பு .! அந்த அசத்தல் பரிசு என்ன தெரியுமா ?

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சென்றாயனுக்கு வரவேற்பு , கலக்கல் பரிசளித்த சிம்பு .! அந்த அசத்தல் பரிசு என்ன தெரியுமா ?


simbu-present-book-gift-to-sendrayan

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சென்றாயன் எலிமினேட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

 மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சென்ராயன், மும்தாஜ், ஜனனி அய்யர் ஐஸ்வர்யா ஆகியோர் எலிமினேட் பட்டியலில் இருந்தனர்.

மேலும்  ஐஸ்வர்யாவே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சென்றாயன் எலிமினேட் செய்யப்பட்டார் .

நடிகர் கமலே இதற்கு பெரும் வருத்தம் தெரிவித்திருந்தார்.மேலும் மக்கள் சரியாக வாக்கு போடவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.மேலும் ஐஸ்வர்யாவை நேரடியாக நாமினேட்செய்யவேண்டும் எனவும் கமல் பிக்பாஸ்க்கு கோரிக்கை வைத்திருந்தார்.மேலும் இந்நிலையில் நடிகர் சிம்பு  பிக்பாஸ்  வீட்டிலிருந்து வெளியேறிய சென்ராயனை,  தன் வீட்டிற்கு அழைத்து வாழ்த்து கூறியுள்ளார்.அதோடு திருமூலரின் திருமந்திரம் என்ற புத்தகத்தையும் பரிசாக அளித்துள்ளார். 

மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை மஹத் தனது இன்ஸ்டகிராமில்  பதிவிட்டுள்ளார்.