'தல'பெயரை வச்சு, மிரட்டலாக வெளிவந்த நடிகர் சிம்புவின் அடுத்த பட டைட்டில்! என்ன தெரியுமா?

'தல'பெயரை வச்சு, மிரட்டலாக வெளிவந்த நடிகர் சிம்புவின் அடுத்த பட டைட்டில்! என்ன தெரியுமா?


Simbu next movie title released

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இதன் டீசர் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து சிம்பு கன்னடத்தில் வெளிவந்த மப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் நாளை வெளியாகும் என ஏற்கனவே என படக்குழு அறிவித்திருந்தது. மேலும்   அதனை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான வெங்கட்பிரபு, ஆனந்த் சங்கர், விக்னேஷ் சிவன், விஜய்மில்டன், கார்த்திக் சுப்புராஜ், பா ரஞ்சித், சந்தோஷ் ஜெயகுமார், அஸ்வத், சாம் ஆண்டன், எம்.ராஜேஷ் என 10 இயக்குனர் வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் இந்நிலையில், இப்படத்தின் தற்போது அப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.  மேலும் இந்த படத்துக்கு பத்து தல என பெயரிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது.