சினிமா

லண்டன் கோடீஸ்வர வீட்டு பெண்ணுடன் சிம்புவுக்கு திருமணம்..? சிம்பு திருமணம் குறித்து டி.ராஜேந்தர் அறிக்கை..!

Summary:

Simbu marriage rumor news

நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் செய்தி வைரலானதை அடுத்து அது வெறும் வதந்தி என அவரது தாய் தந்தையர் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. சர்ச்சைக்கு பெயர் போன நடிகர்களில் இவரும் ஒருவர். குறிப்பாக காதல் கிசுகிசு என்றால் சொல்லவே தேவை இல்லை. ஏற்கனவே நயன்தாரா, ஹன்ஷிகா என பல காதல்களை, காதலிகளை பார்த்த சிம்பு 37 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

இந்நிலையில், சிம்பு லண்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் வீட்டுப் பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும், கொரோனா பிரச்னைகள் முடிவடைந்த பின்னர் திருமணம் நடைபெற உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இதுகுறித்து விளக்கமளித்துள்ள சிம்புவின் தந்தையும், நடிகருமான டி.ராஜேந்தர் இந்த தகவல் உண்மை இல்லை என கூறியுள்ளார்.

மேலும், இது சம்மந்தமாக டி.ராஜேந்தர் மற்றும் அவரது மனைவி உஷா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மைத்தன்மை அற்றவை.

தங்கள் மகனின் ஜாதகத்திற்கு ஏற்றவாறு பெண் பார்த்துக்கொண்டிருப்பதாகவும், பெண் அமைந்ததும் சிலம்பரசனின் திருமணம் குறித்து பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம் என கூறியுள்ளனர்.


Advertisement