வாய் பேசமுடியாத குழந்தையை பேசவைத்த நடிகர் சிம்பு! குவிந்துவரும் பாராட்டு!
வாய் பேசமுடியாத குழந்தையை பேசவைத்த நடிகர் சிம்பு! குவிந்துவரும் பாராட்டு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. சிம்பு என்றாலே சர்ச்சை என்று தமிழ் சினிமாவில் பேசிக்கொள்ளும் அளவிற்கு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் நடிகர் சிம்பு. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் வந்தால் ராஜாவாகத்தான் வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேச முடியாத குழந்தை ஒன்றிற்கு சிகிச்சைக்கு உதவி செய்து, அந்த குழந்தையை பேச வைத்துள்ளார் சிம்பு. வாய் பேச முடியாத குழந்தையை ரசிகர் ஒருவர் சிம்புவிடம் அழைத்து வந்துள்ளார். இனி கவலைப்படாதே இந்த குழந்தையை பேச வைக்கவேண்டியது என்னுடைய் பொறுப்பு என்று சிம்பு கூறியுள்ளார். சொன்னது போலவே அந்த குழந்தைக்கு சிகிச்சைக்கு உதவி செய்து அந்த குழந்தையை பேச வைத்துள்ளார் சிம்பு.
இந்நிலையில் ஜீ தமிழ் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த அந்த சிறுமி அங்கிருந்த சிம்புவிடம் சிம்பு மாமா, சிம்பு மாமா என கூறியுள்ளார். இது சிம்பு உட்பட அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. இதனை சிம்பு ரசிகர் ஒருவர் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சிம்பு நல்ல நடிகன்றதையும் தாண்டி..
— 😈SCR😈 (@Scr_here) December 23, 2018
ஒரு நல்ல மனுஷன்.. 😍😍😍😍😍
pic.twitter.com/7jnzcYU5Gc