சிம்புவின் தம்பி திருமணத்திற்கு யாரெல்லாம் வந்தார்கள் தெரியுமா?

சிம்புவின் தம்பி திருமணத்திற்கு யாரெல்லாம் வந்தார்கள் தெரியுமா?


simbu Brother's marriage photos


தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் டி.ராஜேந்தர். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், என பன்முக திறமைகளை கொண்டு விளங்கினார். இவருக்கு சிலம்பரசன்,குறளரசன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களில் ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன், பாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல பாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அவருக்கும் இஸ்லாமிய பெண்ணிற்கும் காதல் ஏற்பட்டு அவரது வீட்டில் சம்மதம் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒருசில மாதங்களுக்கு முன்பு தங்களது பெற்றோரின் ஆசியோடு குறளரசன் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். இந்நிலையில் டி.ராஜேந்தர் திரையுலகை சேர்ந்த அனைவருக்கும் தனது இளைய மகன் குறளரசனின்  திருமண பத்திரிக்கையை அளித்து வந்தார்.

simbu

கடந்த 26-ம் தேதி இவர்களது திருமணம் முடிந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இவர்களின் திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியில் பல சினிமா திரைபிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.