சினிமா

மீண்டும் ஒரு காதல் கதையில் சிம்பு; வெற்றிபெருமா சிம்பு - கௌதம் கூட்டணி

Summary:

மாதவனின் மின்னலே படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தந்தவர். 

தற்போது விக்ரமின் 'துருவ நட்சத்திரம்', தனுஷின் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' போன்ற படங்களை அவர் இயக்கி வருகிறார்.

simbu and goutham க்கான பட முடிவு

இந்நிலையில் கௌதம் தனது அடுத்த படத்தில்  சிம்புவை வைத்து இயக்க இருக்கிறார். ஏற்கனவே சிம்பு - கௌதம் கூட்டணியில் விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா என இரண்டு வெற்றிப் படங்கள் வெளிவந்துள்ளன. 

simbu and goutham க்கான பட முடிவு

இந்நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் இருவரும் கூட்டணி அமைக்கின்றனர். இதுவும் காதல் கதை தான் என்று கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இப்படமும் நிச்சயம் விண்ணைத் தாண்டி வருவாயா படம் போல் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


Advertisement