சினிமா

பழைய ஞாபகங்களை புதுப்பிக்க மீண்டும் வருகிறார் சித்தி! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Summary:

Siddi old serial will telecast in suntv

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 180க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்குநாள் கொரோனோவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்,  உயிரிழப்புகளும்  அதிகமாகிக் கொண்டே வருகிறது. 

 இதற்கிடையில்  கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பல முன்னணி தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்கள், மற்றும் ஏற்கனவே ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற தொடர்கள் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல முன்னணி தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியிலும் சீரியல்கள் ஒளிபரப்பான நேரங்களில் தங்கம், மெட்டிஒலி போன்ற வெற்றி பெற்ற பழைய தொடர்கள் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் திங்கள் முதல் இரவு 9 மணிக்கு நடிகர் சிவகுமார் மற்றும் ராதிகா நடிப்பில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்ற சித்தி தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் தற்போது அந்த நேரத்தில் சித்தி 2 ஒளிபரப்பாகிறது. 

 


Advertisement