உருவாகிறது நடிகர் சித்தார்த்தின் சூப்பர் ஹிட் திகில் படத்தின் இரண்டாம் பாகம்! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

உருவாகிறது நடிகர் சித்தார்த்தின் சூப்பர் ஹிட் திகில் படத்தின் இரண்டாம் பாகம்! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!



siddharth-going-to-act-in-aval-movie-part-2

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகியுள்ள நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் அவள். இதில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தின் மூலம் மிலிந்த் ராவ் இயக்குனராக அறிமுகமானார்.மேலும் பேய் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு அவள் படம் விருந்தாக அமைந்து வசூலையும் குவித்தது.

இந்நிலையில் சினிமாவில் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டு வரவேற்பை பெற்ற பல வெற்றிப்படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது அதிகமாக உருவாகிவரும் நிலையில் அவள் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. மேலும் அவள் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை இயக்குனர் மிலிந்த் ராவ் எழுதி முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

siddharth

மேலும் முதல் பாகத்தில் நடித்த சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியாதான் இதிலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மிலிந்த் ராவ் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் 'நெற்றிக்கண்' என்ற படத்தை  இயக்கியுள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.