கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் சத்யராஜின் தற்போதைய நிலை என்ன?? அவரது மகன் வெளியிட்ட முக்கிய தகவல்!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் சத்யராஜின் தற்போதைய நிலை என்ன?? அவரது மகன் வெளியிட்ட முக்கிய தகவல்!!


sibiraj-tweet-about-his-father-current-status

கடந்த 2020 ஆம் ஆண்டு பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது மூன்றாவது அலையாகப் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பலரும் அவர் குணமடைய பிரார்த்தனை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் சத்யராஜின் மகனும், பிரபல நடிகருமான சிபிராஜ் தனது அப்பாவின் உடல்நிலை குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், அப்பா நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வந்துவிட்டார். அவர் முழுவதும் நலமாக உள்ளார். சில நாட்கள் ஓய்விற்குப் பிறகு மீண்டும் பணியை தொடங்குவார். உங்களது அன்பு மற்றும் ஆதரவுக்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.